ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!
இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக அபிசேக் சர்மா 40 ரன்கள், கிளாசன் 37 ரன்கள், டிராவிஸ் ஹெட் 28 ரன்களை விளாசினர்.
ஹைதராபாத்தின் பேட்டிங் ஆரம்பத்தில் மெதுவாக இருந்தது. ஹைதராபாத் அணிக்காக, தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். வில் ஜாக்ஸ் வீசிய 9வது ஓவரில் இஷான் கிஷான் அவுட்டானார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதை தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் ஹர்திக் பாண்ட்யாவால் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார், ஆனால் அந்தப் பந்து நோ பால் ஆக இருந்தது, ஹைதராபாத் பேட்ஸ்மேன் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டார்.
இருப்பினும் நிதனமாக விளையாடி கொண்டிருந்த ஹெட் 29 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். வில் ஜாக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஹென்ரிச் கிளாசன் போன்ற ஒரு பேட்ஸ்மேன் கூட இதுவரை 10 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கிளாசென் 28 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நிதிஷ் ரெட்டி 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். இறுதியில், அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி. இப்பொது, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்குகிறது மும்பை அணி.