DC vs LSG : ஆரம்பத்தில் மாஸ்.., இறுதியில் சரிந்த லக்னோ.! பவுலிங்கில் மிரட்டிய டெல்லிக்கு இது தான் இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ அணி 209 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 210 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. புது கேப்டன்களுடன் மோதி வரும் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணி பேட்டிங் செய்தது.
ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ ஆட்டத்தின் பாதியில் அணியில் அடுத்தடுத்த விக்கெட்கள் சரிய தொடங்கியது. தொடர்ச்சியாக ரன்கள் எடுத்த பிறகு லக்னோவை, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சால் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 209/8 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி வெற்றி பெற 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது லக்னோ அணி.
முதலில் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் நிதனமாக விளையாடி 21 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து 72 ரன்களுக்கு வெளியேறினார். அவருடன் நல்ல பார்ட்னர் ஷிப் போட்டு விளையாடிய நிக்கோலஸ் பூரன் வெறும் 30 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். ஆனால், 75 ரன்களுக்கு (14.5) பூரனின் பெரிய விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்தினார். இதை தொடர்ந்து களமிறங்கிய லக்னோவின் கேப்டன் ரிஷப் பந்தை குல்தீப் யாதவ் பூஜ்ஜியத்திற்கு ஆட்டமிழக்கச் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார்.
ஆயுஷ் படோனி 4 ரன்களும் இறுதியாக நின்று விளையாடி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து டேவிட் மில்லர் 19 பந்துகளுக்கு 27 ரன்கள் எடுத்து அவுட்டாக்கினார். ஷாபாஸ் அகமது 8 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேற, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய் மற்றும் திக்வேஷ் ரதி ஆகியோர் ஒரு ரன்கள் கூட எடுக்காமல், அவுட்டாகினர்.
இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் பறிகொடுத்து 209 ரன்கள் எடுத்துள்ளது. இப்பொது, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.