பஞ்சாப் அணியின் பலம் பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
நேற்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு சென்றது.
இந்த நிலையில் இந்த வெற்றியை குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியது, பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதுவரை 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகள் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 3 போட்டிகளுக்கு முன்பு கே எல் ராகுலிற்கு அணியில் தேவைப்பட்டது சிறந்த பௌலிங் தான், ஆனால் அது கடந்த 3 போட்டிகளுக்குமுன்பு வரை கிடைக்காமல் போனது. அதற்கு பிறகு நடந்த 3 போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.
பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பலம் அவர்களது பந்துவீச்சுதான். வருகின்ற போட்டிகளிலும் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடுவார்கள். பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…