2019 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததற்கான காரணங்கள் குறித்து மனம் திறந்தார் அம்பதி ராயுடு.
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தன்னை தேர்ந்தெடுக்காதது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, அவரது இடத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார்.
இந்த தேர்வு குறித்து, அப்போதைய இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத், விஜய் சங்கர் ஒரு 3 டைமென்ஷன் பிளேயர் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இதை சமூக வலைதளத்தில் நக்கலாக அப்பொழுது அம்பதி ராயுடு கேலி செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தற்போது இதுகுறித்து மனதிறந்துள்ளார் ராயுடு. ஐபிஎல் 2023 முடிவடைந்த பிறகு, சமீபத்திய நேர்காணலில் பேசிய அம்பதி ராயுடு, தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருடன் தனக்கு சில சிக்கல்கள் இருந்ததாக வெளிப்படுத்தினார். தான் ஆரம்ப கட்டத்தில் விளையாடும் போது, எம்.எஸ்.கே பிரசாத்துடன் ஒரு சில பிரச்சனைகள் இருந்ததாக கூறினார்.
2019 உலகக் கோப்பைக்கு நான் தேர்வு செய்யப்படாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தேர்வுக்குழு ரஹானே அல்லது அவரைப்போல் ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த வீரரை எனக்கு பதிலாகத் தேர்ந்தெடுத்து இருந்தால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், என்னுடைய இடத்தில் அனுபவம் இல்லாத ஒரு இளம் வீரரை அவர்கள் எப்படி தேர்வு செய்தார்கள் என்று புரியவே இல்லை.
எனக்கு இந்த இடத்தில்தான் கோபம் வந்தது. இது விஜய் சங்கரை பற்றியது அல்ல. அவர் மீது எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. என்னதான் யோசித்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆறாவது, ஏழாவது இடத்தில் விளையாடும் ஒரு வீரரை நான்காவது இடத்தில் விளையாடும் வீரருக்குப் பதிலாக எப்படி தேர்வு செய்து விளையாட வைக்க முடியும்? என்று கேள்வி எழுந்தாகவும் கூறினார்.
இதனிடையே, இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒருநாள் அணியில் நம்பர் 4 இடத்தைப் பிடித்தவர்களில் ராயுடுவும் ஒருவர். இருப்பினும், தேர்வாளர்கள் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை தேர்வு செய்ததால், உலகக் கோப்பை அணியில் இருந்து அம்பதி ராயுடு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…