IPL 2024 : ஐபிஎல் தொடரை நேசிப்பதற்கு இதுதான் காரணம் ..! மனம் திறந்த விராட் கோலி ..!
IPL 2024 : ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் அதற்கான பறிச்சியில் அனைத்து அணி வீரர்களும் ஈடுபட்டு கொண்டே வருகின்றனர். மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரசிகர்களை குஷிப்படுத்த நட்சத்திர வீரர்களிடம் பிரத்யேகமாக சிறிய நேர்காணல் போல செய்து வருகின்றனர். அது போல இந்திய அணியின் விராட் கோலியை வைத்து ஒரு சிறிய நேர்காணல் போல நடத்தினர்.
Read More :- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை! லட்சங்களை அள்ளி கொடுக்கும் பிசிசிஐ!!
அந்த நேர்க்காணலில் இந்த வருடம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த போட்டியை பற்றியும் ஐபிஎல் தொடரை பற்றியும் விராட் கோலியிடம் கேட்கையில் அவர், ” சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போது எப்போதுமே சிறப்பாக அமைந்து இருக்கும். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டின் இரண்டு முக்கிய புள்ளியான எம்எஸ் தோனியும் மற்றும் கோலியும் ஒருவருக்கொருவர் மோதுவதை அவர்கள் காணலாம்.
மேலும், அந்த போட்டி ஒரு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக ஐபிஎல் ரசிகர்களுக்கு அமைந்திருக்கும்”, என்று நடைபெற போகும் போட்டியை பற்றி கூறினார். மேலும், ஐபிஎல் தொடரை பற்றி அவர் கூறுகையில்,” ஐபிஎல் தொடரால் ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் தோழமை மிகவும் நன்றாக இருக்கும்.
Read More :- 5வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி… தொடரை கைப்பற்றியது இந்தியா!
நீண்ட காலமாக ஐபிஎல்லில் உங்கள் நாட்டிற்கு விளையாடும் வீரர்கள் உங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல இருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அன்பு மற்றும் ஆதரவை பார்க்கும் பொழுது தான் நான் ஐபிஎல் தொடரை மிகவும் நேசிக்கிறேன். கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்கும் ஐபிஎல்லை மிகவும் பிடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றால் அது ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து அணி வீரர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் ஒரு இணைப்பு எப்ப்போதும் இருந்து கொண்டே இருப்பது தான் காரணம்”, என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசும் போது கூறினார்.