ஐபிஎல் தொடரிலிருந்து ரெய்னா விலகியதற்கு பல பல தகவல்களை தெரிவித்து வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ரெய்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான அட்டவணையையும் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவித்தார். இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் அமீரகம் சென்றடைந்து, கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக, ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகி, தாயகம் திரும்பினார் சென்னை அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா.
இவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது குறித்து பலரும் பல தகவல்களை தெரிவித்து வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர், தனது குடும்பத்தினருக்கு ஒரு பயங்கரமான சம்பவம் நடந்ததாகவும், அவரின் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரின் அத்தை மற்றும் அவர்களின் இரண்டு மகன்களும் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த மகன்களின் ஒருவர், நேற்றிரவு உயிரிழந்துள்ளதாகவும், அவரின் அத்தை மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த சம்பவம் நடைபெற்ற அன்று என்ன நடந்தது? யார் செய்தார்கள்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனவும், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த பஞ்சாப் மாநில காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த பதிவில், என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் தகுதியானவர்கள் எனவும், அந்த குற்றவாளிகள் அதிக குற்றங்களைச் செய்ய விடக்கூடாது என அந்த பதிவில் அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தனக்கும் தோனிக்கும் எந்தவிதமான மோதலும் இல்லையெனவும், விரைவில் சென்னை அணிக்கு திரும்பி, ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என cricbuzz-க்கு அளித்த பேட்டியில் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…