நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2023யின்-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ராஜஸ்தான் ராயல் அணியின் ஒப்பனராக வழக்கமாக களமிறங்கும் ஜாஸ் பட்லர் இறங்கவில்லை. அவருக்கு பதில் அணியின் ஆல் ரவுண்டர் அஸ்வின் களமிறங்கினார். 1 ரன்கள் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
மேலும், அஸ்வின் ஓப்பனிங் இறங்கியதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் பலரும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை தீட்டி தீர்த்தி வருகிறார்கள். இதனையடுத்து, போட்டி முடிந்து பேசிய சஞ்சு சாம்சன் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய சஞ்சு சாம்சன் ” பட்லருக்கு பீல்டிங் செய்யும் போது விரலில் காயம் ஏற்பட்டது. அவரது கையில் தையல் போடப்பட்டது. அந்த தையல்களை முடித்துவிட்டு அவர் வெளியே வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. பிறகு, அஸ்வினை இறக்கிவிட்டோம்.
தொடக்க வீரராக பட்லருக்கு பதில் படிக்கலை களமிறக்கலாமா எனவும் அணியுடன் ஆலோசித்தோம். ஆனால், பஞ்சாப் அணியில் ராகுல் சஹர் மற்றும் சிக்கந்தர் ராசா என்று இரு ஸ்பின்னர்கள் இருந்ததால் அந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை” என கூறியுள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…