சொந்த ஊர் சின்னப்பம்பட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து இந்திய முன்னாள் வீரர் சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய தொடரில் வலை பயிற்சி மேற்கொள்ள தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
பின்னர் இந்திய அணியில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாத சூழலில், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுலபமாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அவரே எதிர்பார்க்காத வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. இவரது பந்துவீச்சை பார்த்து பலரும் பாராட்டினர்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பிய நடராஜனை சின்னப்பம்பட்டியை சேர்ந்த மக்கள், மேளதாளத்துடன் அவரை சாரட் வண்டியில் ஆரவாரமாக அழைத்து வரப்பட்டார். நடராஜனை வரவேற்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டனர். சாரட் வண்டியில் பயணித்த நடராஜனுக்கு இந்திய கோடியை போர்த்தி அவ்வூர் மக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், நடராஜனுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதுதான் இந்தியா. இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அதற்கும் மேலானது என்று நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வீடியோ காட்சியுடன் சேவக் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…