ஜோகிந்தர் ஷர்மா காவல்துறையில் இருந்துக்கொண்டு இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது .அவரை பெருமைப்படுத்தும் வகையில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகிந்தர் புகைப்படத்தை பகிர்ந்து பெருமைப்படுத்தியுள்ளது .
இந்தியா 2007 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை 20 ஓவர் போட்டியில் பாக்கிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட மாட்டார்கள் ,கடைசி ஒரு ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற விழும்பில் ஒரு விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தது பாக்கிஸ்தான் .
தோனி கடைசி ஓவரை யாருக்கு கொடுப்பார் ? முன் அனுபவமுள்ள வீரருக்கு தான் கொடுப்பார் என்று நாம் டிவியின் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் ,அப்பொழுது யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஜோகிந்தர் ஷர்மாவிடம் கொடுத்து ஆட்டத்தை முடிக்க சொன்னார் தோனி .
தோனியின் கூற்றுப்படி ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார் ஜோகிந்தர் .இதனால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 2007 ஆம் ஆண்டுக்கான கோப்பையை கைப்பற்றியது இந்தியா .
இந்நிலையில் ஜோகிந்தர் ஷர்மாவின் புகைப்படத்தை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரை பெருமைப்படுத்தியுள்ளது .அதில் ஜோகிந்தர் ஷர்மா 2007 ஆம் நடந்து உலககோப்பையின் புகைப்படம் மற்றும் தற்பொழுது அவர் காவல்துறை உடையில் இருக்கும் படத்தையும் ப்கிர்ந்து ‘ 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை டி20 யின் ஹீரோ தற்பொழுது 2020 ஆண்டிற்கான உலகத்தின் உண்மையான ஹீரோ ‘ என்று கூறி அவரை பெருமைப்படுத்தியுள்ளது .
ஒரு காவல் அதிகாரியாக தனது பிந்தைய கிரிக்கெட் வாழ்க்கையில், இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் முயற்சியைச் செய்தவர்களில் ஒருவர் என்று கூறியுள்ளது .தற்பொழுது இந்தியா கொரோனாவின் பிடியில் சிக்கி 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பாதுகாப்பு பணியில் ஜோகிந்தர் ஷர்மா ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் எந்த இடத்தில் இருந்தாலும் அதை நேசிக்க வேண்டும் என்பதற்கு ஜோகிந்தர் ஷர்மா ஒரு உதாரணம்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…