IPL 2024 : ‘ சிஎஸ்கே அணியில் இதுதான் குறை ‘ – ஆகாஷ் சோப்ரா !
IPL 2024 : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச்-22ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அணிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பலமான அணியாக இருந்து வருகிறது. இருந்தாலும் அதில் ஒரு சில குறைகள் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Read More :- ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்..!
இந்த ஐபிஎல் தொடர் ‘தல’ தோனிக்கு கடைசியான தொடர் அதனால் இந்த முறையும் சிஎஸ்கே அணிதான் கோப்பையை வெல்வார்கள் என்று முழு நம்பிக்கையோடு ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் சென்னை அணியில் குறை இருப்பதாக தற்போது ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார். அவர் அவரது யூடுப் சேனலில், ” இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் வலுவாக இருந்தாலும், சுழற் பந்து வீச்சாளர்கள் பக்கம் வந்தால் அது வீக்னஸாக தெரிகிறது.
சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த சுழற் பந்து வீச்சாளர் என்று பார்க்கும் போது அது ரவீந்திர ஜடேஜா தான் வேறு யாரும் இல்லை. மேலும், அஜய் மண்டல், நிசான் சிந்து, பிரசாந்த் சோலங்கி, தீக்சனா போன்ற சுழற் பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஜடேஜா தான் பிளையிங் லெவனில் இருப்பார். அவர் தற்போது தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி விட்டு வருகிறார். ஜடேஜா ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட் வீரர், ஒரு நாள் போட்டிகளிலும் நன்றாக விளையாடி உள்ளார்.
Read More – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆனால், டி20 போட்டியில் அவர் சற்று தோய்வாகத்தான் இருக்கிறார். இது சென்னை அணிக்கு ஒரு குறையாக இருக்கும், இது சிஎஸ்கே அணிக்கு நல்ல விஷயம் கிடையாது. இது என்னுடைய கருத்தே ஆகும் “, என்று அவரது யூடுப் சேனலில் வீடியோ ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறி இருந்தார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள், ‘ இதை எப்படி நீங்கள் குறையாக பார்க்கலாம்? ‘ என்று சமூகவலைத்தளங்களில் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.