இதுவே முதல்முறை.. 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கோலிக்கு வந்த சோதனை!

Default Image

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களிலிருந்து விராட் கோலி வெளியேறினார்.

ஐசிசி இன்று சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான சமீபத்திய தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 811 ரேட்டிங்-யுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 5 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களை விட்டு வெளியேறுவது இதுவே முதல்முறை. சமீப காலமாக கோலியின் ஃபாம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது மேலும் சோதனையாக அமைந்துள்ளது.

ரோஹித் சர்மா 791 ரேட்டிங்-யுடன் ஐந்தாவது இடத்தில உள்ளார். ஐசிசி-யின் ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 892 ரேட்டிங்-யுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். இவரைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு வீரர் இமாம்-உல்-ஹக் 815 ரேட்டிங்-யுடன் இப்போது உலகின் இரண்டாவது ஒருநாள் பேட்டராக உள்ளார். இதனிடையே, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலில், இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி 105 ரேட்டிங் உடன் 5-வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்