உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தமும் ஏமாற்றத்தையும் கொடுத்ததை போல அவருக்கும் இது ஏமாற்றமாக இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
கொஞ்சம் ஏமாற்றமா இருக்கு
இந்திய கிரிக்கெட் உலககோப்பை அணியில் என்னுடைய பெயர் இடம்பெறாதது சற்று வருத்தமாக தான் இருக்கிறது. முதலில் என்னுடைய பெயர் வரவில்லை என்று தெரிந்தவுடன் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் மோசமாக உணர்ந்தேன். பிறகு தனியாக அமர்ந்த்து யோசித்து பார்த்தேன் ஒரு அணியில் 15 வீரர்கள் தான் இருக்க முடியும். உலகக்கோப்பை போட்டியில் 17, 18 பேரை எடுத்து வைக்க முடியாது. இதனை நான் நன்றாக புரிந்துகொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
அதுவே பழகிவிட்டது
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” என்னுடைய பெயர் இப்படி இடம்பெறாமல் போவது ஒன்னும் புதுசு இல்லை. இதற்கு முன்னதாகவும் கூட பல முக்கியமான போட்டிகளில் என்னுடைய பெயர் இடம்பெறாமல் இருந்துள்ளது. எனவே, எனக்கு இந்த மாதிரி அனுபவங்கள் எல்லாம் பழகிவிட்டது. எனவே, உலககோப்பை போட்டியில் இடம்பெறாமல் போனது பெரிய அளவில் ஏமாற்றமாக எனக்கு தெரியவில்லை” எனவும் வருத்தத்துடன் பேசினார்.
எப்படியாவது கிரிக்கெட் விளையாடனும்
தொடர்ந்து பேசிய சாஹல் ” எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது இதன் காரணமாக எப்படியாவது எந்த போட்டியிலாவது விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருந்து எப்படியாவது கிரிக்கெட் விளையாடவேண்டும் என்று தான் வந்தேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக தான் பயன்படுத்துகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
அக்சர் பட்டேலுக்கு பதில் அஸ்வின்
மேலும். உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேல் இடம்பெற்று இருந்த நிலையில், ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் அவருக்கு முன்பக்க தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டது. எனவே, காயம் காரணமாக அக்சர் படேல் அடுத்ததடுத்த போட்டியில் விலகினார். இந்த நிலையில், அவருக்கு பதிலாக அஸ்வின் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வினுக்கு பதிலாக சாஹல்-ஐ சேர்த்து இருக்கலாம் என ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…