ஐசிசி : ஐசிசி வெளியிட்டுள்ள புதிய கீதத்தில் (Anthem) இந்திய அணிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐசிசி (ICC) எப்பொழுதும் இது போல சர்வதேச தொடரை தொடங்குவதற்கு முன்பு எல்லா அணிகளையும், கிரிக்கெட்டையும், கிரிக்கெட் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் கீதம் (Anthem) ஒன்றை வெளியிடுவார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஐசிசி கீதம் ஒன்றை வெளியிட்டனர். 3 நிமிடம் கொண்ட அந்த கீதத்தை உலக புகழ் கிராமி விருது (Grammy-winning composer) பெற்ற இசையமைப்பாளர் லோர்ன் பால்ஃப் இசைமைத்திருந்தார்.
இது போன்ற கீதம் எல்லாம் எப்போதாவது எதாவது வருடத்தில் நன்றாக மக்களிடையே பிரபலம் அடைந்து விடும். உதாரணமாக 2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு ஒரு பாடல் வெளியாகி உலக மக்களிடையே பிரபலம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கீதம் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருக்கும் அதாவது அந்த தொடரில் கலந்து கொண்ட சிறிய அணிகளுக்கு கூட அந்த பாடலில் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.
அதே போல இந்த வருடம் வெளியிட்டுள்ள இந்த ஐசிசி கீதமானது கிரிக்கெட் ரசிகர்களிடேயே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது என்னவென்றால் ஐசிசி அவர்களது X தளத்தில் வெளியிட்டுள்ள அந்த கீதத்தின் வீடியோ காட்சிகளில் உலகக்கோப்பையில் கலந்து கொண்டுள்ள எந்த ஒரு சிறிய அணியையும் காட்டாமல் வெறும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துருக்கிறாரர்கள் என X தளத்தில் கூறி வருகின்றனர். அதிலும் ஒரு சில ரசிகர்கள் இது “ஐசிசி கீதம் இல்லை ..இந்திய கீதம்” என்று கேலி செய்யும் வகையில் சமூக வலைதளத்தில் கூறி வருகின்றனர். மேலும், “சிறிய அணிகளான ஆப்கானிஸ்தான் , அமெரிக்கா, வங்கதேசம் போன்ற எந்த அணிகளுக்கும் ஒரு சிறிய அளவு கூட முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை 3 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில் 10 வினாடி கூட எந்த ஒரு சிறிய அணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இது ஐசிசி கீதம் தான் இந்திய கீதம் கிடையாது” என இதே போல பலரும் அந்த பதிவிற்கு கீழ் காட்டமாக தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால், இதற்கு ஐசிசி இப்படியே கண்டுகொள்ளாமல் விடுவார்களா? இல்லை இதற்க்கு பதிலளிக்கும் வகையில் ஏதேனும் கூறுவார்களா? என்று நாம் பொறுத்து இருந்தே நாம் பார்க்கவேண்டும்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…