இது சதம் இல்லை அடுத்த வருஷம் ஐபிஎல்லுக்கு எச்சரிக்கை! மிரட்டிய அபிஷேக் சர்மா!

இளம் கிரிக்கெட் வீரரான அபிஷேக் ஷர்மா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் அளவுக்கு மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

abhishek sharma

குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில் பொறிக்கப்பட்ட போட்டிகளாக மாறியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், ஏப்ரல் 15, 2024 அன்று, ஆர்சிபிக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை ஹைதராபாத் அணி படைத்தது.

அதைப்போல, மும்பை அணிக்கு எதிராக 277/3 ரன்களை எடுத்தது. இந்த அளவுக்கு அணி அதிரடியாக விளையாட ஒரு தீ சுடராக அமைந்தவர்களில் ஒருவர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை கூறலாம். அந்த அளவுக்கு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டி அவருடைய பெயரை வெளியில் தெரிய உதவியது. 16 பந்துகளில் அதிவேக ஐபிஎல் அரைசதம் கூட கடந்த ஆண்டு விளாசி இருந்தார். 2024 இல்16 போட்டிகளில் 32.26 சராசரியில் 484 ரன்கள், மூன்று அரை சதங்களுடன் மிரட்டலான பார்மில் இருந்தார்.

அவருடைய பார்ம் இன்னும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மிரட்டலாக விளையாடி வருகிறார். பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் சதமும் விளாசியுள்ளார்.

போட்டி 50 ஓவர் போட்டி தான் ஆனால், அபிஷேக் சர்மா விளையாட்டு டி20 தொடரில் வீரர்கள் எப்படி விளையாடுவார்களோ அதைப்போலவே விளையாடினார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், 96 பந்துகளில் 170ரன்கள் எடுத்து எதிரணி வீரர்களை திகைத்துபோக வைத்தார். அவர் விளாசிய 170 ரன்களில் 22 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அபிஷேக் சர்மா இப்படி விளையாடி வருவதை பார்த்த ரசிகர்கள் இது சதம் இல்லை அடுத்த வருஷம் ஐபிஎல்லுக்கு எச்சரிக்கை அடுத்த வருஷம் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்த போகிறார் என கூறி வருகிறார்கள்.

விஜய் ஹசாரே டிராபி தொடரில்  இவருடைய அதிரடியான ஆட்டம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில். வருகின்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரை இந்திய அணி தேர்வாளர்கள் தேர்வு செய்வார்களா என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest