இது சாதாரண சதம் அல்ல! ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஷேன் வார்ன்!
உலகத் தரமான பந்துவீச்சு, ஆடுகளத்தின் தன்மை, ஆட்டத்தின் போக்கு, என அனைத்துடனும் மோதி பதிவு செய்துள்ள சதம் இது – ஷேன் வார்ன்
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 , அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 , ஜடேஜா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை விட்டு 277 எடுத்திருந்தது.
டெஸ்ட் தொடருக்கான கேப்டன் ரஹானே சிறப்பாக விளையாடி பாக்சிங் டே டெஸ்டில் 197 பந்தில் சதம் விளாசியுள்ளார். இது டெஸ்ட் தொடரின் ரஹானேவின் 12 வது சதம் ஆகும். ரஹானே 104 *, ஜடேஜா 40* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்நிலையில், பாக்சிங் டே டெஸ்டின் தரமான சதங்களில் இதுவும் ஒன்று என ரஹானேவை, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் புகழ்ந்துள்ளார். நூற்றுக்கணக்கான சதங்களில் இதுவும் ஒன்று என கடந்து விட முடியாது.
இது பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த சதங்களில் ஒன்று. உலகத் தரமான பந்துவீச்சு, ஆடுகளத்தின் தன்மை, ஆட்டத்தின் போக்கு, என அனைத்துடனும் மோதி பதிவு செய்துள்ள சதம் இது. இது ஏன் அப்படி ஒரு தரமான சதம் என்பதை இதற்கு மேலும் சொல்ல முடியாது. ஆனால் இதை மட்டும் நான் சொல்லியே ஆகணும். இது தரமான பாக்சிங் டே சதம். இந்திய டெஸ்ட் கேப்டன் ரஹானேவின் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்திற்கு இது ஒரு உதாரணம். இதனை இந்தியாவில் உள்ள கோலி ரஹானேவின் ஆட்டத்தை பார்த்து வியந்துருப்பார் என தெரிவித்துள்ளார்.
Ajinkya Rahane’s 12th Test ton – and one of his best! #OhWhatAFeeling@toyota_Aus | #AUSvIND pic.twitter.com/hfUBIhI5qZ
— cricket.com.au (@cricketcomau) December 27, 2020