இதுவரை டி-20 போட்டிகளில் இந்தியாவிற்கு இது போன்ற பேட்டிங் வரிசை அமைந்ததில்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
டி-20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி-20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையடைந்துள்ளது. சூரியகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார், ஹர்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்திய அணிக்கு பேட்டிங்கில் மேலும் வலு சேர்க்கின்றனர். இவர்கள் மிடில் ஆர்டர் மற்றும் பினிசிங்கில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ரோஹித், ராகுல், மற்றும் கோலி ஆகியோரின் மீதுள்ள அழுத்தம் தற்போது நீக்கியுள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.
ரவி சாஸ்திரி இது குறித்து மேலும் கூறியதாவது, நான் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்ததிலிருந்து தற்பொழுது வரை இந்திய அணியை கவனித்துக்கொண்டு தான் வருகிறேன், இதற்கு முன்பு இந்திய அணியில் இப்படிப்பட்ட பேட்டிங் வரிசை இருந்ததில்லை. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், கோலி, சூரியகுமார், ஹர்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலிமையாக இருக்கிறது. தற்போதுள்ள இந்திய அணியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது, மேலும் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…