நேற்றையை போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தோல்வி நிச்சயமாக எங்களுக்கு ஒரு பெரிய தோல்வி என்று கூறியுள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது
தொடக்கத்திலே அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி , 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழப்பிற்கு 219 ரன்களை டெல்லிக்கு இலக்காக வைத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த தோல்வியை குறித்து போட்டி முடிவடைந்தவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது, இந்த தோல்வி நிச்சயமாக எங்களுக்கு ஒரு பெரிய தோல்வி. எங்கள் அணிக்கு அதிகம் ரன்ரேட்கள் தேவைபடுகிறது. எங்களுக்கு இப்போது இரண்டு போட்டிகள் உள்ளன, நாங்கள் ஒரு போட்டியில் வெல்ல வேண்டும்.
தொடர்ந்து எங்கள் அணி தோல்வியை சந்தித்து வருகிறது. அடுத்த வரும் போட்டிகளில் நங்கள் வலிமையாக வருவோம். இந்த போட்டியை நாங்கள் பவர் பிளேயிலேயே இழந்தோம். என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…