கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க தோனிக்கு, இது ஒரு வாய்ப்பு- ஸ்டைரிஸ்
சிஎஸ்கே-வின் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க தோனிக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு 2023இல் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சிஎஸ்கே அணிக்கு ரூ.16.25 கோடிக்கு விற்கப்பட்டார்.
சிஎஸ்கே அணிக்கு, தோனிக்கு பிறகு எதிர்கால கேப்டன் வாய்ப்பாக பென் ஸ்டோக்ஸ் இருப்பார் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்து வருகின்றனர். நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் இது குறித்து கூறியதாவது, சிஎஸ்கே அணிக்கு பென் ஸ்டோக்ஸ் வருகை தோனி தனது கேப்டன் பொறுப்பை வழங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
ஏற்கனவே தோனி 2022 ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் வழங்கியிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.