இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் களமிறங்கியது.
தொடக்கத்தில் இருந்தே விக்கெட் விட்ட காரணத்தால் ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தபோது பெங்களூர் வீரர் ரஜத் படிதார் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து ஹைதராபாத் அணியை மிரள வைத்தது என்றே கூறலாம்.
நேற்று நடைபெற்ற போட்டியில் அவருடைய இன்னிங்ஸ் பெங்களூர் அணிக்கு பெரிய பக்க பலமாக அமைந்தது என்று கூட சொல்லலாம். 20 பந்துகளில் அரைசதம் விளாசி அவுட் ஆனார். அவருடைய பேட்டிங் பற்றி ரசிகர்கள் பலரும் புகழ்ந்து பேசி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா இந்த ஆட்டம் பத்தாது என்பது போல பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ரஜத் படிதார் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அருமையாக விளையாடி இருக்கிறார்.
அவருடைய பேட்டிங்கை பார்க்கும்போது ரொம்பவே அருமையாக இருக்கிறது. ஆட்டத்தின் 11வது ஓவரில் அவர் நான்கு சிக்சர்களை அடித்தார். அதனை பார்த்தவுடன் நான் உண்மையிலேயே என்ன இந்த வீரர் இப்படி விளையாடுகிறார் என்று வியந்துவிட்டேன். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் வழக்கமாக இவ்வளவு வேகத்தில் செயல்பட மாட்டார்கள். ஆனால், ரஜத் படிதார் பேட்டிங் வேகமாக இருக்கிறது.
கண்டிப்பாக அவர் பெரிய அளவில் வளர்வார் என்று நான் நினைக்கிறன். பெங்களூர் அணியில் அவருக்கு என்று தனி இடம் இருக்கும் என்று நம்புகிறேன். அவர் இப்படி விளையாடும்போது, விராட் கோலி அல்லது ஃபாஃப் டு பிளெசிஸ் உடன் இருந்தாலும் அணிக்கு பக்க பலமாக இருக்கும். அவருடைய சிறந்த ஆட்டத்தை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை இந்த விளையாட்டு மட்டும் பத்தாது. இன்னும் அவர் வரும் போட்டிகளில் நன்றாக விளையாடவேண்டும். தவறுகள் செய்யாமல் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக இது போன்று பயன்படுத்தி கொள்ளவேண்டும்” எனவும் அஜய் ஜடேஜா அட்வைஸ் செய்துள்ளார்.