“இந்த படம் எனக்கு ஸ்பெஷல்”…லப்பர் பந்து பார்த்துவிட்டு அஸ்வின் சொன்ன விமர்சனம்!

ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் தான் லப்பர் பந்து என அஸ்வின் பாராட்டியுள்ளார்.

ravichandran ashwin about rubber bandhu

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பொழுதுபோக்குக்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம், நல்ல படங்கள் வெளியானால் அதனை, பார்த்துவிட்டுப் பாராட்டத் தவறியது இல்லை.

அதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம் என்றால், கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த கோட் படத்தினை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது பெரிய வரவேற்பைப் பெற்று வரும் லப்பர் பந்து படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தைக் கூறி, படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.

“லப்பர் பந்து” படம் கிரிக்கெட் சார்ந்த கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்ட காரணத்தால், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் படத்தினை விரும்பி பார்த்து வருகிறார்கள். கிரிக்கெட் சார்ந்த கதையை மையமாக எடுக்கப்பட்ட காரணத்தால் என்னவோ, படம் அஸ்வினையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு அந்த அளவுக்குப் புகழ்ந்து இருக்கிறார்.

படம் பார்த்துவிட்டு அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” படம் பார்க்கும்போதே படம் எடுக்க எவ்வளவு கடினமாக உழைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. படத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதற்கு எதுவுமே இல்லை. படத்தில் எந்த விஷயத்தையும் குறை சொல்லவே முடியாது.

அனைத்தும் பாசிட்டிவாக இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை அதிகமுறை பார்த்து ரசித்தேன் என்றால் அது இந்த படம் தான். விளையாட்டு தொடர்பான படங்களில் காலங்காலமாக பின்பற்றப்படுபவற்றைத் தாண்டி, ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் தான் லப்பர் பந்து.

பொதுவாக, தமிழ்ப் படங்களில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கும்போது, அதன் கதைக்கருவை விட்டுவிட்டு அவர்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களைத்தான் சொல்வார்கள். அது போன்று விஷயங்கள் இந்த படத்தில் இல்லை என்பதால் எனக்கு இந்த படம் ஸ்பெஷல்.

இயக்குநருக்கு பாராட்டுகள். ஹரிஷ் கல்யாண், கெத்து தினேஷ், சஞ்சனா, சுவஸ்திகா, காளி வெங்கட், பாலா என அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனவும் நெகிழ்ச்சியாக அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வினுக்கு இந்த படம் மனதளவில் ஒரு தாக்கத்தையும், தன்னுடைய இளமைப் பருவத்தில் நடந்த விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்திருப்பதால் தான் படம் பார்த்துவிட்டு இந்த அளவுக்குப் பாராட்டி இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar