மூன்றாவது டெஸ்ட் போட்டி:ரோகித் சர்மா அரைசதம் …!ரன்குவிப்பில் இந்திய அணி …!
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் தனது 10 வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று துவங்கியது.
இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் அடித்தது.
இந்நிலையில் இன்று 2 -வது நாள் ஆட்டம் தொடங்கியது.இந்திய அணி 166 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 415 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய வீரர் ரோகித் தனது 10 வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். களத்தில் ரோகித் 52*,பண்ட் 26 * ரன்களுடன் உள்ளனர்.இந்திய வீரர் புஜாரா 106 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் .