மூன்றாவது டி20 போட்டி – தொடரை வெல்லுமா இந்தியா?
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது போட்டியில், இந்திய அணி பவுலிங், பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பியதால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
குறிப்பாக அன்றைய போட்டியில் இந்திய 7 நோ பால்களை வீசியதும், இதில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோ பால்களை வீசியது விமர்சனத்துக்குள்ளானது. மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமம் நிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடக்க உள்ளது.
இந்த போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. இருப்பினும், இந்திய அணி இன்றைய போட்டியில் சில மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும், சொந்த மண்ணில் தொடரை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளது. எனவே, 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா எனவும் எதிர்பார்க்கபடுகிறது.