தல தோனியின் பினிஷிங் டச்! இந்தியா 324 ரன்கள் குவிப்பு!!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ததுள்ளது. இந்நிலையில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆபரமாக ஆடி அரைசதம் அடித்துள்ளது.
இந்நிலையில், ரோஹித் சர்மா 87 ரன்களுடனும், சிகர் தவான் 66 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த விராட் கோலி வழக்கம்போல் தனது ஆட்டத்தை ஆடி 45 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அவர் எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
அதன் பின்னர் வந்த அம்பட்டி ராயுடு மிகவும் பொறுமையுடன் களமிறங்கி 47 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து, அடுத்ததாக களமிறங்கிய தல தோனி வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ஃபினிஷிங் டச் காரணமாக 33 பந்துகளில் 48 ரன்களை விளாசியுள்ளார். இதில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.
மேலும் அடுத்து வந்த கேதர் ஜாதவ் பந்துகளில் 22 ரன்கள் குவித்துள்ளார். இறுதியாக 50 ஓவர்களில் இந்திய அணி 324 ரன்கள் குவித்துள்ளார்.