Kapil Dev [file image]
கபில் தேவ்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் தற்போது இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளது. அதே போல மறுமுனையில் தென்னாபிரிக்கா அணியும் தோல்வியை சந்திக்காமல் முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த இரு அணிகளும் நாளை இரவு 8 மணிக்கு பார்படாஸில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இறுதி போட்டியில் மோதுகிறது. இந்த போட்டிக்கான பயிற்சியில் தற்போது இந்த 2 அணிகளும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியில் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதை குறித்து பெருமிதமாக ANI பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதில், “இந்திய அணியின் ஆட்டம் மிக்க சிறப்பாக இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்றால் யாராவது அவர்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடினார்கள் என்று பாருங்கள்.
ஒருவரின் பெயரை மட்டும் அல்லாமல், முழு அணியையும் பாராட்டுங்கள். நான் எப்போதும் ஒரு அணியின் முக்கியத்துவத்தை நம்புகிறேன். ரோஹித் சர்மாவின் தலைமையில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறப்பாகவே விளையாடியுள்ளனர்”, என்று பெருமிதமாக அவர் கூறினார்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…