முரட்டுத்தனமா அடிக்கிறாங்க..தயவு செஞ்சி அந்த விதியை எடுங்க…முகமது சிராஜ் வேதனை!
Siraj : பெங்களூரு அணியின் முகமது சிராஜ் ஐபிஎல் தொடரில் பின்பற்ற படும் ‘இம்பாக்ட்’ விதியை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் உபயோகப்படுத்தும் விதியான இம்பாக்ட் ப்ளேயர் விதி பல சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த விதியை நீக்க வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், விளையாடி கொண்டிருக்கும் தற்போதைய கிரிக்கெட் பிரபலங்களும் பல இடங்களில் பேசும் பொழுது இதை குறிப்பிட்டு கூறி இருக்கின்றனர். அதிலும் சில நாட்களுக்கு முன் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும் இதை குறித்து பேசி இருந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் நேற்றைய மதிய போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியது. இதில் கொல்கத்தா அணி 1 ரன்கள் வித்யாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு பெங்களூரு அணி வேக பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்த இம்பாக்ட் பிளேயர் விதியை பற்றி சில விஷயங்களை சிரித்து பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “முதலில் உங்களை நீங்கள் எல்லா நிலையிலும் தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். நீங்கள் அதிகமாக நெகட்டிவ் பற்றி சிந்தித்தால் நான் அது உங்களுக்கும், உங்களைச் சுற்றியும் ஒரு நெகட்டிவ் பாதிப்பையே ஏற்படுத்தும். மேலும், ஐபிஎல் தொடரில் பயன்படுத்தும் இந்த இம்பாக்ட் விதியை தயவு செய்து நீக்குங்கள் (சிரித்துக் கொண்டே பேசினார்). இங்கு பிட்சுகள் ஏற்கனவே பேட்டிங்கு வசமாக உள்ளது.
இதில் பந்து வீச்சார்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து வீச்சாளர்களுக்கு சில நேரங்களில் பிட்ச் உதவுகிறது. ஆனால், அப்போதும் பேட்ஸ்மேன்கள் பந்து ஸ்விங்கிலிருந்து தடுப்பதற்கு வெளியே வந்து விளையாடுகிறார்கள். மேலும், எனது விளையாட்டின் திட்டம் எப்போதுமே சீரானதாகத்தான் இருக்கும். ஐபிஎல்லில் ஒரு அணி 250-க்கும் மேற்பட்ட ரன்கள் அடிப்பது எப்பவாவது தான் நடக்கும்.
ஆனால் இப்போது அது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அதற்கு இந்த இம்பாக்ட் விதிக்கும், தட்டையான பிட்ச்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்”, என்று போட்டி முடிந்த பிறகு ‘இம்பாக்ட்’ விதியை பற்றி சிராஜ் பேசி இருந்தார். இவர் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.