இந்த இருவரையும் அந்தஸ்தின் அடிப்படையில் அணியில் சேர்க்கக்கூடாது.. கம்பீர் முக்கிய எச்சரிக்கை!
2023 ஆசியக் கோப்பை ஒருநாள் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று முன்தினம் பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணியில் கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரையும் மீடனும் சேர்த்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கே.எல் ராகுல் மற்றும் ஒரு சில காயங்களிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டு வருகின்றனர்.
இருவரும், பெங்களூரில் உள்ள என்சிஏவில் சில மேட்ச் சிமுலேஷன்களை விளையாடி வருகின்றனர். தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூறுகையில், ஐயர் முழு உடல் தகுதியுடன் இருக்கும்போது, ராகுலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. தற்போது இருவரும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் முதல் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக உள்ளது.
மேலும் கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் இடம்பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், செப்டம்பர் 5-ஆம் தேதி ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது பிசிசிஐ. அதாவது ரோஹித் ஷர்மா மற்றும் நிர்வாகம் அனைத்து வீரர்களையும் மதிப்பிடுவதற்கும் 15 பேர் கொண்ட பட்டியலை இறுதி செய்வதும் முக்கியவாய்ந்தவை.
இந்த நிலையில், செலக்ஷன் டே ஷோவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர், ஐயர் மற்றும் ராகுல் இருவரும் தங்களது ஃபார்மை நிரூபிக்க வேண்டும். இருவரையும் அவர்களின் அந்தஸ்தின் அடிப்படையில் அணியில் சேர்க்கக்கூடாது, அவர்களின் ஃபார்ம் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் தான் அணியில் சேர்க்க வேண்டும் என்று காயத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய இருவருக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒன்று தெளிவாகிறது, நீங்கள் உலகக் கோப்பையை வெல்ல முயற்சிக்கும் போது பார்மட் மற்றும் வீரர்களின் ஃபார்ம் மிக முக்கியம். இதனால், பார்மில் இல்லாதவர்களை விட, பார்மில் இருக்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அது ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் அல்லது யாராக இருந்தாலும், பார்மில் இருக்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றுள்ளார்.
மேலும், திலக் வர்மா ஒருவரை விட சிறந்த ஃபார்மில் இருந்தால், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது கே.எல் ராகுல் அல்லது இஷான் கிஷானை விட சிறந்த ஃபார்மில் இருந்தால், அந்த வீரர்களை கொண்டு நீங்கள் தொடங்க வேண்டும். உலகக் கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால், யார் முன்னணியில் இருப்பவர், இல்லையா என்பதை பார்க்க வேண்டாம் என்றும் ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.