வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்.! ரோஹித் சர்மா பேச்சு
முதல் குவாலிபயர் போட்டியில் நேற்று ஈஸியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்து முதலில், களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் அடித்தது.
அடுத்ததாக 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்து. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் இறுதி போட்டிக்கு மும்பை அணி முதலாவதாக நுழைந்தது.
மேலும், நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதரபாத் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் களம்காணும். அதில் வெற்றிபெறும் அணி, மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.
இது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது, இது எங்களது மிகச்சிறப்பான ஆட்டம் என நினைக்கிறேன். டி காக் மற்றும் சூர்யகுமார் யாதவ்வின் ஆட்டம் எங்களை சரிவில் இருந்து மீட்டது. நான் விரைவாக விக்கெட்டை இழந்து சொதப்பிய போதும் டி காக் மற்றும் சூர்யகுமார் யாதவ் எங்களுக்கு கை கொடுத்தனர். நாங்கள் மற்ற அணிகளை விட வித்தியாசமானவர்.
மற்றவர்களை விட வித்தியாசமாகவே விளையாடி வருகிறோம். இஷான் கிஷன் செம பார்மில் உள்ளார். நல்ல ஷாட்கள் அடித்து எதிரணி பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்றே இஷன் கிஷனுக்கும் க்ரூணல் பாண்டியாவுக்கும் அறிவுறுத்தினோம். பேட்டிங் ஆர்டரை என்ன தான் மாற்றி அமைத்தாலும் எங்கள் வீரர்கள் மிகச்சிறப்பாகவே விளையாடி வருகின்றனர், இறுதி போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.