இந்த 4 அணிகள் தான் அறை இறுதிக்கு வருவாங்க ..! கணிக்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்!

T20 WC

டி20 2024 : ஸ்டார்ஸ்போர்ட்ஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் அவர்கள் கணிக்கும் 4 அணிகளை அறை இறுதி போட்டிக்கு முன்னிறுத்தி உள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 9 மைதானங்களில் வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக இந்த ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்த டி20 உலகக்கோப்பை தான்.

இந்நிலையில், ஸ்டார்ஸ்போர்ட்ஸில் வர்ணனையாளராக செயலாற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அம்பதி ராயுடு , பிரையன் லாரா, பால் காலிங்வுட், சுனில் கவாஸ்கர், கிறிஸ் மோரிஸ், மேத்யூ ஹைடன், ஆரோன் ஃபின்ச், முகமது கைஃப், டாம் மூடி, மற்றும் ஸ்ரீசாந்த்.

இவர்கள் அனைவரும் அவர்களுக்கு பிடித்தமான இந்த 4 அணிகள் தான் அரை இறுதி போட்டிக்கு வரும் என்று கணித்து ஒரு வீடியோவில் நேற்று பேசி இருந்தனர். அந்த வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அவர்களது க்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தனர்.  இதில் யார் யார் எந்தெந்த அணிகளை தேர்வு செய்துள்ளார்கள் கீழே பார்க்கலாம்.

    • அம்பதி ராயுடு – இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா
    • பிரையன் லாரா – இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்
    • பால் காலிங்வுட் – இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா
    • சுனில் கவாஸ்கர் – இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்
    • கிறிஸ் மோரிஸ் – இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா
    • மேத்யூ ஹைடன் – ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா
    • ஆரோன் பின்ச் – இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள்
    • முகமது கைஃப் – இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
    • டாம் மூடி – ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து
    • ஸ்ரீசாந்த் – இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்