#IPL2022: “நாட் அவுட்” என்று புலம்பும் ரசிகர்கள் “DRS முறை இல்லை” என்று கூறும் அம்பயர்.. நடந்தது என்ன?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், மின்வெட்டு ஏற்பட்டதால் , DRS முறை பார்க்க முடியாது என்று அம்பயர்கள் அறிவித்தனர். ஆனால் அதுவே சென்னை அணிக்கு எதிராக முடிந்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – கான்வே களமிறங்கினார்கள்.
இந்த ஆட்டம் தொடங்கும் முன்னதாக மைதானத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்டுள்ள நிலையில், DRS முறை பார்க்க முடியாது என்று அம்பயர்கள் அறிவித்தனர். இந்நிலையில். முதல் பந்தில் ருதுராஜ் சிங்கிள் அடிக்க, கான்வே பேட்டிங் செய்தார். டேனியல் சாம்ஸ் வீசிய பந்தில் கான்வே LBW முறையில் அவுட் ஆனார். அதனைதொடர்ந்து அம்பயரிடம் கான்வே மற்றும் கெய்க்வாட் பேசிக்கொண்டிருந்தார்கள்.
No DRS available due to power cut in stadium ????
Devon Conway & Robin Uthappa departs for LBW decision ????????: BCCI/IPL#DevonConway #RobinUthappa #DRS #CSKvsMI #IPL2022 pic.twitter.com/cSOTF8gQmO
— SportsTiger (@sportstigerapp) May 12, 2022
அப்பொழுது மும்பை அணியின் கேட்பன் ரோஹித் சர்மா அம்பயரிடம் முறையிட்டார். அதனைதொடர்ந்து ருதுராஜிடம் பேசினார். பின்னர் கான்வே, மைதானத்தை விட்டு வெளியேறினார். கான்வேக்கு வீசிய பந்து, லெக் சைடில் மிஸ் ஆவதாகவும், இது நாட் அவுட் என்று ரசிகர்கள், கிரிக்கெட் விமசர்கள் என அனைவரும் கூறி வருகின்றனர். அவரைதொடர்ந்து மொயின் அலி தனது விக்கெட்டை இழக்க, உத்தப்பா LBW முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.
Unlucky for Devon Conway, the ball was missing leg stump. There’s No DRS due to Powercut in the stadium. Poor Umpiring. #CSKvsMI #CSKvMI #MIvsCSK #MSDhoni???? #IPL2022 pic.twitter.com/HbZq7LEVAz
— Cricket Star (@CricketStar24x7) May 12, 2022
அவரும் அம்பயரிடம் DRS கேட்டார். அப்பொழுதும் DRS இல்லாததால் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தபிறகு அவரும் வெளியேறினார். உத்தப்பாக்கு வீசிய பந்து, ஸ்டம்பை பார்த்து வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை DRS முடிவு இருந்திருந்தாலோ, அம்பயர் சரியான முடிவை எடுத்திருந்தால் போட்டி நிச்சியமாக மும்பை அணிக்கு சாதகமாக அமைந்திருக்காது என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.