வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்குவதில் அவர் போல் யாரும் இல்லை; ஷர்துல் தாக்குர் புகழாரம்.!
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தான் எனது பேட்டிங் குரு என ஷர்துல் தாக்குர் புகழாரம்.
கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் ஷர்துல் தாக்குர், ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் தனியாளாக நின்று விளையாடி அதிரடி காட்டினார். ஒரு சமயத்தில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருக்கையில் கொல்கத்தா அணியின் ஸ்கோர் 150 ஐ தொடுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில் 204 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.
ஷர்துல் அதிரடி: ஷர்துல் தாக்குர் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசினார். அவர் 29 பந்துகளில் 9 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்கள் என ஆட்டத்தின் திசையையே தனது அதிரடி பேட்டிங்கால் மாற்றிக்காட்டினார் என்றே சொல்லலாம்.
சேவாக் தான் குரு: போட்டிக்கு பிறகு தாக்குர் பேசுகையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான வீரேந்திர சேவாக் தான் எனது அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்று கூறினார். எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்குவதில் அதிலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சேவாக்கின் அதிரடி பேட்டிங் வேறு யாராலும் அடிக்கமுடியாது என புகழ்ந்து கூறியுள்ளார்.
சேவாக்கிடமிருந்து தான் நானும் அதிரடி பேட்டிங் கற்றுக்கொண்டேன் என ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார். முன்னதாக கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.