கிங் கோலிக்கு இணையாக யாரும் இல்லை- விவ் ரிச்சர்ட்ஸ்..!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு மேற்கிந்திய தீவு கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் பாராட்டு மழை பொழிந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான விவ் ரிச்சர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அளித்த பேட்டியில், கோலி கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகவும் வரலாற்றில் இடம் பெறுவார். இந்தப் போட்டியில் நாங்கள் பல சிறந்த வீரர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்களில் முதன்மையானவர் விராட். நான் அவருக்கு பெரிய ரசிகன்.

சச்சின் போல் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவராக விராட் இருப்பார் என கூறியுள்ளார். உலகக்கோப்பைக்கு முன்னதாக விராட்டின் ஃபார்மின் குறித்தும் விவ் பேசினார். உலகக்கோப்பைக்கு முன்பு அவர் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் விராட்கோலி இனி தேவை இல்லை என்று சிலர் கருத்துக்களையும் தெரிவித்தனர். ஆனால், விராட் மீண்டும் தனது சிறந்த ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

ஒரு கிரிக்கெட் வீரரின் ஃபார்ம் தற்காலிகமானது என்று கூறப்படுகிறது. ஆனால் விராட் தன்னை ஸ்பெஷல் என்று நிரூபித்தார். அவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அவர் மிகவும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறார். கிரிக்கெட்டுக்கான சிறந்த வீரர் கோலி என்று ரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்தார்.

விராட் தன்னுடன் ஒப்பிடப்பட்டதற்கு விவ்வும் பதிலளித்தார். நாங்கள் களத்தில் ஒரே பாணியில் இருப்பதால் சிலர் விராட்டை என்னுடன் ஒப்பிடுகிறார்கள். அவருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த நிலையில் விளையாடினாலும் அவருடைய கவனம் எப்போதும் விளையாட்டில்தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களை நான் பாராட்டுகிறேன் என்று ரிச்சர்ட்ஸ் கூறினார்.

விராட் கோலி சமீபத்தில் தனது 35-வது பிறந்தநாளில் தனது 49-வது ஒருநாள் சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்தார். இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் 543 ரன்கள் குவித்து ரன் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்