அணியில் முக்கிய வீரர் இல்லை..பாகிஸ்தானுக்கு பின்னடைவு!
டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் அமெரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய பாபர் அசாம்” அணியில் முக்கிய வீரராக இருக்கும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் வாசிம் தசைப்பிடிப்பில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. தற்போது அவரை மருத்துவ ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், இந்த போட்டியை தவிர உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவார்” எனவும் பாபர் அசாம் கூறியுள்ளார்.
டி20 போட்டிகளில் அனுபவமிக்க வாசிம், தசைப்பிடிப்பி காரணமாக ஓய்வில் இருந்த நிலையில், உலகக் கோப்பையை மனதில் வைத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அமெரிக்காவில் எதிர்பார்க்கப்படும் மெதுவான ஆடுகளங்களில் அவரது பந்துவீச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தேர்வாளர்கள் நம்பி அவரை அணியில் எடுக்கப்பட்ட நிலையில், அவரால் முதல் போட்டியில் விளையாட முடியாமல் போனது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.