தோனி கேப்டன் பணியில் குறுக்கு வழியே கிடையாது – எல்.பாலாஜி.!

தோனி கேப்டன் பணியில் குறுக்கு வழியே கிடையாது என்று எல்.பாலாஜி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.
அதன்படி போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை பயிற்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது, மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளர் எல்.பாலாஜி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் மீண்டும் சிறப்பாக விளையாடுவது ஒன்றும் அவர்களுக்கு சிரமம் இல்லை அவர் எப்பொழுதுமே சிறப்பாக விளையாடுவார்கள்.
மேலும் அணியில் சீனியர் வீரர்கள் இருப்பது பலவீனம் அல்ல அது அவர்களுக்கு பலமே. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியைப் பொறுத்தவரை எப்போதும் சகவீரர்களுக்கு ஆதரவு அளிப்பார் மேலும் கேப்டன் பணியில் குறுக்கு வழி என்பதெல்லாம் அவருக்கு கிடையாது. மேலும் அவசரகதியில் முடிவுகள் எடுக்க மாட்டார், அணியில் உள்ள வீரர்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகளை அனைவர்க்கும் வழங்குவார் என்றும் எல்.பாலாஜி கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025