பேட்டிங் செய்வதற்கு ஆஸ்திரேலியாவை விட சிறந்த மைதானம் உலகில் கிடையாது- விராட் கோலி
வேகப்பந்து மைதானங்களில் நீங்கள் பேட்டிங் செய்து பழகி விட்டால், அதை விட சிறந்த மைதானம் வேறு எங்கும் இருக்கமுடியாது என்று கோலி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஐசிசியின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியின் விராட் கோலி அங்குள்ள மைதானங்களின் தன்மையை பற்றி புகழ்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய மைதானங்கள் பொதுவாக வேகம் மற்றும் பௌன்ஸ் க்கு ஏற்றதாக இருக்கும். இது குறித்து விராட் கோலி கூறியதாவது, ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து மைதானங்களில் நீங்கள் பேட்டிங் செய்து பழகிவிட்டால், பேட்டிங்கிற்கு அதை விட வேறுசிறந்த மைதானம் இருக்கமுடியாது.
நான் எந்தவித விடியோவும் பார்ப்பதில்லை நேராக வலைப்பயிற்சிக்கு சென்று எனது பயிச்சியில் ஈடுபடுவேன். இதுபோன்ற வேகப்பந்து மைதானங்களில் நீங்கள் விளையாடும்போது முதல் சில பந்துகள் அங்குமிங்கும் பௌன்ஸ ஆகும், ஆனால் அதன்பிறகு சூழலின் தன்மையைப் பொறுத்து பந்தின் பௌன்ஸை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலியா மைதானங்களில் எப்போதும் சிறப்பாக விளையாடிவரும் விராட், டி-20களில் ஆஸ்திரேலியாவில் 13 ஆட்டங்களில் 85 சராசரியுடன் 595 ரன்கள் குவித்துள்ளார். அதில் 7 அரைசதங்களுடன் ஆஸ்திரேலியாவில் டி-20 போட்டியில் 500 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்தியா தனது அடுத்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து பெர்த்தில் நாளை விளையாடுகிறது. புள்ளிப்பட்டியலில் இந்தியா 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இருக்கிறது.