விராட் கோலிக்காக ‘பலிகடா’ ஆக்கப்பட்டாரா ஜெய்ஸ்வால்? ரசிகர்கள் அதிருப்தி!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்காக இளம் வீரர் ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Jaiswal - Virat kohli

கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

டாஸ் முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா , கடந்த ஒருநாள் போட்டி ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும், அதில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், இந்த போட்டியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி ஒருநாள் போட்டியில் முதல் முறையாக அறிமுகமாக உள்ளார் என்றும், ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் களமிறங்குவார் என்றும் குறிப்பிட்டார். அடுத்து அவர் குறிப்பிடுகையில் இந்த போட்டியில் விராட் கோலி களமிறங்க உள்ளார் அதனால் ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் விளையிடவில்லை என குறிப்பிட்டார்.

இதுதான் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜெய்ஸ்வால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய சார்பாக 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தான் அறிமுகமாகி விளையாடினார். இப்படி இருக்கையில் அவருக்கு இந்த போட்டியில் விளையாட அனுமதிக்காமல் அவருக்கு பதிலாக அனுபவமிக்க விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களமிறங்கியது, நல்ல ஃபார்மில் உள்ள இளம் வீரர் ஜெய்ஸ்வாலை ‘பலிகடா’வாக மாற்றிய செயல் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க உள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது ஃபார்ம் கடந்த சில போட்டிகளாக மிக மோசமான நிலையில் உள்ளதும் ரசிகர்கள் மத்தியில் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இப்படியான சூழலில் நல்ல விளையாட்டு திறன் கொண்ட இளம் வீரரை அணியில் எடுக்காமல் போனது துரதஷ்டவசமானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்