Suryakumar Yadav : டெல்லி அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி 20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடிய போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லண்டனில் ஹெர்னியாவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்தார். பிறகு காயம் குணமடைந்த நிலையில் , பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) கிரிக்கெட் பயிற்சியையும் தொடங்கினார்.
கடந்த சில மாதங்களாக அங்கு அவர் பயிற்சி எடுத்து வந்த நிலையில். சூர்யகுமார் யாதவ், தன்னுடைய உடற்தகுதியை நிரூபித்துள்ளதாகவும், ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ வட்டாரத்தில் இருந்த அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சூர்யகுமார் யாதவ் உடற் தகுதி குறித்து பேசியதாவது ” சூர்யகுமார் யாதவ் இப்போது பொருத்தமாக இருக்கிறார். இதற்கு முன்னதாக NCA அவரை சில பயிற்சி ஆட்டங்களை விளையாட வைத்தது. அதில் அவர் மிகவும் அருமையாக விளையாடினார். இதன் காரணமாக வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மும்பை அணியில் இணைய வாய்ப்புள்ளது.
அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்கிறார். வருகின்ற போட்டிகளில் விளையாடத் தயாராக இருக்கிறார்” என கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நாயகன் மீண்டும் வரார் என கூறி வருகிறார்கள். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டில் 3 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி அணியை மும்பை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா இல்லையா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…