அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கோபத்துடன் ரிஷப் பண்ட்டுடன் பேசும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

rishabh pant sanjiv goenka

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால், முதலில் கே.எல்.ராகுல், அணியை 2022 மற்றும் 2023 சீசன்களில் பிளேஆஃப்ஸ் வரை அழைத்துச் சென்றாலும், அவரது மெதுவான பேட்டிங் ஸ்டைல் மற்றும் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 10 விக்கெட் தோல்வியடைந்த பிறகு கடுமையாக திட்டும் படியான வீடியோக்கள் வெளியாகி இருந்தது,

அதனை தொடர்ந்து கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகி கொள்வதாக கூறி ஏலத்தில் டெல்லி அணியில் எடுக்கப்பட்டு தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். அவர் லக்னோ அணியில் இருந்தபோது அவருக்கு என்ன நடந்ததோ அதே தான் தற்போதைய கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட்டுக்கும் நடந்துள்ளது.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் புண்டை லக்னோ அணி ரூ.27 கொடுத்து வாங்கியது. எனவே, அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகிறார். லக்னோ அணி மூன்று போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் 0, 15, மற்றும் 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் கூட லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சிரித்துக்கொண்டு பண்ட்டை உற்சாகப்படுத்தி கொண்டு இருந்தார்.

ஆனால், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது, ராகுல் நிதானமாக ஆடியது ஒரு பிரச்சினையாக இருந்தது என்றால், பண்ட் தற்போது தன் அதிரடி பாணியை இன்னும் காட்டாதது அணியின் எதிர்பார்ப்பை சற்று குறைத்திருக்கிறது.

இதன் காரணமாக போட்டி முடிந்த பிறகு ரிஷப் பண்ட்டை அழைத்து உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கோபத்துடன் பேசும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த பலரும் அன்று கே.எல்.ராகுல்..இன்று ரிஷப் பண்ட் என கூறி வருகிறார்கள். இந்த விமர்சனங்களுக்கும் சஞ்சீவ் கோயங்கா கோபம் குறையவேண்டும் என்றால் ரிஷப் பண்ட் திரும்பவும் பழைய பார்முக்கு வரவேண்டும். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்