ஐபிஎல்லில் கலக்கும் இளம் வீரர் ..! ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் ..!

Published by
அகில் R

IPL 2024 : 2008 முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அதாவது குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியல்.

ஐபிஎல் போட்டிகள் கலைக்கட்டுவதற்கு முக்கிய காரணம் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், பந்து வீசும் பவுலர்களின் பந்தை நான்கு பக்கமும் அடித்து துவம்சம் செய்வது தான். அதை மைதானத்தில் காணும் ரசிகர்களும், டிவியில் பார்க்கும் ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருவார்கள். இது 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடர் முதல் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வரை நீடித்து கொண்டே இருக்கிறது.

இப்படி, பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்து பறக்க விடும் பொழுது குறைந்த பந்தில் அரை சதம் எடுத்தவர்கள், அதிக சிக்ஸர்கள், அதிக ஃபோர்கள் என எல்லா கணக்குகளையும் எடுத்து வைத்து கொள்வார்கள். அப்படி அதில் அதிவேக அரை சதம் அடித்த, குறைந்த பந்தில் அரை சதம் அடுத்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரரும், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரும் ஆன ஜெய்ஸ்வால் முதலிடத்தில் இருக்கிறார். இவர், வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்தார்.

கே.எல். ராகுல் அதற்கு முன்பு 14 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். அந்த போட்டிக்கு பிறகு ஒரு போட்டியில் விளையாடிய பேட் கம்மின்ஸும், 14 பந்துகளில் அரை சதம் அடித்தாரே தவிர ஜெய்ஸ்வாலின் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2020-ல் ஐபிஎல் தொடரில் முதன் முதலில் களமிறங்கினார். அதை தொடர்ந்து சென்ற வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் விளையாடிய ஒரு போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவரை தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக பேட் கம்மின்ஸ், லக்னோ அணிக்காக கே.எல்.ராகுல், கொல்கத்தா அணிக்காக யூசுப் பதன் போன்ற வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். ஐபிஎல் என்றாலே அது இளம் வீரர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு பாதையாக இருந்து வரும்  நிலையில் ஜெய்ஸ்வால் போன்ற அட்டகாசமான இளம் வீரர்களின் இது போன்ற சாதனை இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலத்தை தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐபிஎல் தொடரில் அதிவேக அரை சதம் அடித்தவர்கள் :

  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான்)- 13 பந்துகள்
  • பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா) – 14 பந்துகள்
  • கே.எல்.ராகுல் (லக்னோ ) – 14 பந்துகள்
  • யூசுப் பதான் (கொல்கத்தா) – 15 பந்துகள்
  • நிக்கோலஸ் பூரன் (லக்னோ) – 15 பந்துகள்
  • சுனில் நரேன் (கொல்கத்தா) – 15 பந்துகள்
Published by
அகில் R

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

2 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

2 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

3 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

5 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

5 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

6 hours ago