ஐபிஎல்லில் கலக்கும் இளம் வீரர் ..! ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் ..!
IPL 2024 : 2008 முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அதாவது குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியல்.
ஐபிஎல் போட்டிகள் கலைக்கட்டுவதற்கு முக்கிய காரணம் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், பந்து வீசும் பவுலர்களின் பந்தை நான்கு பக்கமும் அடித்து துவம்சம் செய்வது தான். அதை மைதானத்தில் காணும் ரசிகர்களும், டிவியில் பார்க்கும் ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருவார்கள். இது 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடர் முதல் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வரை நீடித்து கொண்டே இருக்கிறது.
இப்படி, பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்து பறக்க விடும் பொழுது குறைந்த பந்தில் அரை சதம் எடுத்தவர்கள், அதிக சிக்ஸர்கள், அதிக ஃபோர்கள் என எல்லா கணக்குகளையும் எடுத்து வைத்து கொள்வார்கள். அப்படி அதில் அதிவேக அரை சதம் அடித்த, குறைந்த பந்தில் அரை சதம் அடுத்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரரும், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரும் ஆன ஜெய்ஸ்வால் முதலிடத்தில் இருக்கிறார். இவர், வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்தார்.
கே.எல். ராகுல் அதற்கு முன்பு 14 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். அந்த போட்டிக்கு பிறகு ஒரு போட்டியில் விளையாடிய பேட் கம்மின்ஸும், 14 பந்துகளில் அரை சதம் அடித்தாரே தவிர ஜெய்ஸ்வாலின் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2020-ல் ஐபிஎல் தொடரில் முதன் முதலில் களமிறங்கினார். அதை தொடர்ந்து சென்ற வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் விளையாடிய ஒரு போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவரை தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக பேட் கம்மின்ஸ், லக்னோ அணிக்காக கே.எல்.ராகுல், கொல்கத்தா அணிக்காக யூசுப் பதன் போன்ற வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். ஐபிஎல் என்றாலே அது இளம் வீரர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு பாதையாக இருந்து வரும் நிலையில் ஜெய்ஸ்வால் போன்ற அட்டகாசமான இளம் வீரர்களின் இது போன்ற சாதனை இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலத்தை தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஐபிஎல் தொடரில் அதிவேக அரை சதம் அடித்தவர்கள் :
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான்)- 13 பந்துகள்
- பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா) – 14 பந்துகள்
- கே.எல்.ராகுல் (லக்னோ ) – 14 பந்துகள்
- யூசுப் பதான் (கொல்கத்தா) – 15 பந்துகள்
- நிக்கோலஸ் பூரன் (லக்னோ) – 15 பந்துகள்
- சுனில் நரேன் (கொல்கத்தா) – 15 பந்துகள்