ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இந்த 13-வது போட்டியான டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இந்த போட்டியானது குரு சிஷ்யன் போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்படும் இந்த போட்டி தற்போது டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் இது வரை தோல்வியை சந்திக்க்காமல் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த போட்டியில் டெல்லி அணியை சந்திக்க உள்ளது .
நடைபெறபோகும் இந்த போட்டியானது விசாகப்பட்டினம், ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இது வரை வெற்றியே பெறாத டெல்லி அணி இந்த போட்டியை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.
டெல்லி அணி வீரர்கள் :
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
சென்னை அணி வீரர்கள் :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ் பாண்டே.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…