நடப்பாண்டில் மிக மோசமான அணி சென்னை என்று பிளே ஆப் சுற்றுக்குள் செல்லாது என்று முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்2020: இன்று ஐபிஎல் தொடரின் 41 வது லீக் ஆட்டம் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது.
அபுதாபியில் ஒவ்வொரு அணியும் தங்களது பலத்தை நிருபித்து வருகிறது. ஆனால், நடப்பாண்டில் சென்னை அணி மட்டுமே ஜொலிக்க தவறியது. சென்னை அணி ஆடிய ஆட்டங்களில் படுதோல்விகளை சந்தித்து வரும் நிலையில், நடப்பாண்டில் சென்னையின் பிளே ஆப் சுற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்றைய போட்டி சென்னை அணிக்கு ஒரு இறுதி வாய்ப்பாகவே கருதப்படுகிறது. இதில் வெற்றியை ஈட்டியே தீர வேண்டும் என்ற ஒரே வழி தான் உள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் பிளே ஆப் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கூறுகையில் நான் கூறுவது சென்னை அணிக்கு காயத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கும்.
ஆனால் இதுவே நிதர்சனம். இன்றைய போட்டியில் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் மிக மோசமான அணியாக சென்னை உள்ளது. அவர்களின் பிளே ஆப் ஏற்கனவே பறிபோய் விட்டதாகவே உணர்கிறேன்.
சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் கூறியது போன்றே இந்த அணி மூன்றாவது சீசனாக விளையாடி வருகிறது. அணியில் பல மேட் வின்னர்கள் இருக்கின்றனர். ஆனால் யாரும் சரியான பார்முக்கு இன்னும் ஏனோ வரவில்லை டூப்ளிசிஸ், தீபக் , தவிர மற்ற வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…