உலகக்கோப்பை தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து மோதல்!

ENG vs NZ

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இன்று  முதல் தொடங்கி நவ.19ம் தேதி வரை இந்தியாவில் உள்ள சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த உலகக்கோப்பை தொடரில் 2வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளும் கடந்த சில நாட்களாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வந்த நிலையில், இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடர் தொடங்குகிறது.  இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டுள்ளது. இதில், குறிப்பாக இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள் என இரு அணிகளிலும் ஒரு நல்ல கலவையை கொண்டுள்ளது.

ஆனால், இங்கிலாந்து அணியில் உள்ள சிறந்த ஆல்-ரவுண்டர்கள் அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கருதப்படுகிறது. இன்றைய போட்டியில் வில்லியம்சன் விளையாடாதது நியூசிலாந்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால், முதல் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இங்கிலாந்து எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 95 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 44 முறை வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் ட்ராவில் முடிந்தது, மீதம் 4 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. எனவே, இன்றை நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஒரு அணிகளில் ஒன்றுக்கு ஒன்றுக்கு சலச்சத்து இல்லை என காட்டும். இதனால், இப்போட்டி அனல்பறக்கும் போட்டிக்காக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் காணலாம். ஒடிடியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் app அல்லது இணையதளத்தில் கண்டு களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (c & wk), ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி ஆகியோர் உள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி: டாம் லாதம் (c & wk), டெவோன் கான்வே, வில் யங், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி, மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட், லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி, மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்