1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில் நடந்தது போல நடப்பதால் உலக்கோப்பை பாகிஸ்தானுக்கா !

Default Image

நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 105 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்தது.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது  போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது.அப்போட்டியில் பாகிஸ்தான் அணி 348 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 9  விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்தது.அதனால் அப்போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தனது மூன்றாவது போட்டியை இலங்கை அணியுடன் விளையாட இருந்தது.மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.அதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு உலக்கோப்பையில் நடப்பது போல 1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில் முதல் போட்டியில் தோல்வியும் ,இரண்டாம் போட்டி வெற்றியும் பெற்றது. மூன்றாவது போட்டி மழை காரணமாக நின்றது.அந்த வருட இறுதி போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
அதேபோல இந்த வருடமும் நடப்பதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
1992WC
1st Match – Lost
2nd Match – Won
3rd Match – No Result
And Won World Cup
2019WC
1st Match – Lost
2nd Match – Won
3rd Match – No Result*

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்