Live Cricket : பாகிஸ்தான் அணியை 105 ரன்களுக்குள் சுருட்டிய மேற்கு இந்திய தீவுகள் அணி

Default Image

12 வது உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி  நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது மோசமான ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து.அந்த அணியில் யாருமே 30 ரன்களை கூட தாண்டவில்லை.

இறுதியாக பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே அடித்தது.பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் பாபர்,சமன் தலா 22 ரன்கள் அடித்தனர்.மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் தாமஸ் 4,ஹோல்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதன் பின்  106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்