19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 13-வது போட்டியாக இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி நல்லதொரு தொடக்கத்தையே தொடக்க வீரர்கள் தொடங்கி வைத்தனர். ஒருவரும் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்களை சேர்த்தனர். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் யாரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ரன்களை எடுப்பதிலும் சற்று கவனம் சிதறினர்.
பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை அணி ..! நமீபியா படுதோல்வி..!
இறுதியில் அந்த அணி 50 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக ஜேமி டங்க் 57 ரன்கள் எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இசாய் தோர்ன் 4 விக்கெட்டை கைப்பற்றினார். அதை தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.
முதல் 10 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. பின் களமிறங்கிய வீரர்கள் சீரான விளையாட்டை வெளிப்படுத்தி 35.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். அந்த அணியில் ஜூவல் ஆண்ட்ரூ இறுதி வரை ஆட்டமிழக்காமல் 64* ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 5 விக்கெட் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…