ஐபிஎல் தொடரில் இன்று சென்னை அணி, மும்பையுடன் மோதவுள்ள நிலையில், அணியின் பலம், பலவீனம் குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 3-வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ், இறுதி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், சிக்ஸர்களை அதிகளவில் காணும் வாய்ப்புக்கள் உள்ளது. இந்தநிலையில்,
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதிய நிலையில், அதில் சென்னை அணி அபாரமாக வெற்றிபெற்றது. இந்த வெற்றி தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அது நீடிக்கவில்லை. சென்னை அணி தொடர்ந்து தோல்விகள் படைக்க, மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்துக்கொண்டே வந்தது. மேலும், சென்னை அணி மீது விமர்சனங்கள் குவியத் தொடங்கியது.
அணியில் ரெய்னா இல்லாதது, மீடில் ஆர்டர் பேட்டிங்கில் சரிவை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது பிராவோ விலகியது, கூடுதல் பலவீனமாக அமைந்தது. இந்தநிலையில் 40 போட்டிகளுக்கு பின், இன்று மும்பை – சென்னை அணிகள் களம்காணவுள்ளது. புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கும் சென்னை அணி, தொடர்ந்து நடைபெறவுள்ள 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெரும்.
தொடக்கத்தில் சாம் கரண் – டு ப்ளஸ்ஸிஸ் சற்று மெதுவாக ஆடிவருது, அணிக்கு பலவீனம். ஆனால் சாம் கரண் அதிரடி ஆட்டத்தை காட்டுவது, அணிக்கு பெரிய பலமாக கருதப்படுகிறது. ரெய்னா இல்லாதால் மீடில் ஆர்டரில் சென்னை அணி பயங்கரமான சொதப்புகிறது. ஒரு சில போட்டிகளில் வாட்சன் நன்றாக ஆட, அவரைதொடர்ந்து களமிறங்கும் ராயுடு, நல்ல பார்மில் இல்லை. கேதார் ஜாதவும் சொதப்ப, ஜடேஜா சிறப்பாக ஆடிவருவது சென்னை அணியின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.
கீப்பிங்கில் தல தோனி மிரட்டும் நிலையில், பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார் என்றால் இல்லை. பந்துவீச்சில் தீபக் சஹர், ஷரத்துல் தாக்குர் சிறப்பாக விக்கெட்களை வீழ்த்துவது, அணிக்கு கூடுதல் பலம். அவர்களை தொடர்ந்து பியூஸ் சாவ்லா விக்கெட்களையும் வீழ்த்த, ரன்களை வாரி வழங்குவது பலவீனமே. இந்த போட்டியில் பிராவோ இல்லாத காரணத்தினால், இம்ரான் தாஹிர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…