நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி , நியூஸிலாந்து அணி உடன் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.
நியூஸிலாந்து அணி நேற்று விளையாடி கொண்டு இருக்கும் போது 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று போட்டி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்தது.
பின்னர் 240 என்ற இலக்குடன் களமிங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக கே .எல் ராகுல் , ரோஹித் இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே தொடக்க வீரர்கள் இருவருமே தடுமாறி விளையாட தொடங்கினர்.
இந்நிலையில் ரோஹித் 1 ரன்னுடன் வெளியேறினர்.இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோலி களமிறக்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என ரசிகர்கள் எதிர் பார்த்தனர்.ஆனால் கேப்டன் கோலியும் 1 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்த சிறிது நேரத்திலே கே .எல் ராகுலும் 1 ரன்னில் வெளியேற ஆட்டத்தை மைதானத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த ரோஹித் தொடக்க வீரர்கள் மூன்று பேருமே 1 ரன்னில் வெளியேறியதால் வருத்தம் தாங்க முடியாமல் கண் கலங்கி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பின்னர் 240 என்ற இலக்குடன் களமிங்கிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இறுதியாக 49.3 ஓவரில் 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…