டி20I : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் இன்றைய நாள் (ஜூன்-2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், அமெரிக்கா அணியும் இன்று காலை 6 மணிக்கு டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக கனடா அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய நவ்நீத் தலிவால் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார். இவர் அதிரடி காட்டி 44 பந்துக்கு 61 ரன்கள் எடுத்தார் அதில் 3 சிக்ஸர்களும், 6 பவுண்டரிலும் அடங்கும்.
அதன் பின் அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் கிர்டனும் அவருடன் அதிரடி காட்ட கனடா அணியின் ஸ்கோர் உயர்வை கண்டது. சீரான இடைவெளியில் இருவரது விக்கெட்டும் விழுந்த பிறகு கனடா அணியின் விக்கெட் கீப்பரான ஷ்ரேயஸ் மொவ்வா களமிறங்கி ஒரு சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 16 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவரில் கனடா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துது. அதன் பின் இமாலய இலக்கை எட்டுவதற்கு பேட்டிங் களமிறங்கியது அமெரிக்கா அணி. முதல் 10 ஓவரில் அமெரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும். ஆனால் ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆக்ரோஷமான அதிரடியில் சரிவில் இருந்து அமெரிக்கா அணி மீண்டது.
இருவரும் அரை சதம் கடந்து அபாரமாக கனடா அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தனர். மிகச்சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ரன்கள் எடுத்து, வெற்றியின் அருகில் எட்டிய போது ஆட்டமிழந்தார். ஆனால், மறுபக்கம் இருந்த ஆரோன் ஜோன்ஸ் மிகச்சிறப்பாக விளையாடி 17.2 ஓவர்களில் அமெரிக்க அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இதன் மூலம் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துக்கு 94 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் காரணமாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை அமெரிக்க அணி பதிவு செய்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…