U19WorldCup2024 : இன்று நடைபெறும் 2 போட்டிகள்!

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் ஜனவரி 19 முதல் நடைபெற்று வருகிறது. நேற்று ஜனவரி 3 போட்டிகள் நடைபெற்றது. ஒரு போட்டியில் இந்தியா  vs வங்காளதேசம் அணியும் மற்றோரு போட்டியில் ஸ்காட்லாந்து vs இங்கிலாந்து அணியும், மூன்றாம் போட்டியில் பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.

நேற்றைய போட்டி முடிவுகள் :

இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதிய போட்டியில், இந்திய அணி 84 ரன்களில் வெற்றி பெற்றது. பின் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியில், பாகிஸ்தான்  அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

INDvsBAN: இந்திய அணி அபார வெற்றி…!

அந்த போட்டிகளை தொடர்ந்து இன்றயை தினமான ஜனவரி 21-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. எந்தெந்த அணிகள் எல்லாம் இன்று விளையாடவுள்ளது என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து vs நேபாளம் :

இன்று நடைபெறவுள்ள ICC Under 19 World Cup 2024 தொடரின் 7-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும்,  நேபாள அணியும் கிழக்கு லண்டனில் அமைந்து இருக்கும் Buffalo மைதானத்தில் பலப்பரீட்சை  நடத்துகிறது.

இலங்கை vs ஜிம்பாப்வே :

அதன் பின் ICC Under 19 World Cup 2024 தொடரின் 8-வது போட்டியில் இலங்கை அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிம்பர்லியில் அமைந்து இருக்கும் டய்மண்ட் ஓவல் மைதானத்தில் நடை பெறவுள்ளது. இரண்டு போட்டிகளும் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்