கோப்பை கேகேஆருக்கு தான் ..! அடித்து கூறும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!

Matthew Hayden

மாத்தியூ ஹெய்டன் : நாளை நடக்கப்போகும் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி தான் கோப்பையை வெல்லும் என சில காரணங்களை வைத்து மாத்தியூ ஹெய்டன் கூறி இருக்கிறார்.

நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் லீக்கில் ஒரு போட்டி, குவாலிபயர்-1 என 2 முறை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அந்த 2 முறையும் கொல்கத்தா அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது நமக்கு தெரியும். மேலும், கொல்கத்தா அணியின் பந்து வீச்சும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் பலரும் இறுதி போட்டியில் வெற்றி பெற போகும் அணி கேகேஆர் தான் என கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மாத்தியூ ஹெய்டனும் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதனை குறித்து மாத்தியூ ஹெய்டன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசிய போது, “கொல்கத்தா அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். குவாலிபயர் முதல் போட்டிக்கு பின் கொல்கத்தா அணி வீரர்களுக்கு சிறந்த ஓய்வும் கிடைத்துள்ளது. அதே போல் ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியையும் நான் பார்த்தேன். இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றையும் அறிய இந்த போட்டி உதவியாக அமைந்தது.

மேலும், ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஐதராபாத் அணியை கொல்கத்தா அணி தோற்கடித்திருப்பதால் கொல்கத்தா அணி வீரர்கள் மனதளவில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதே போல் சேப்பாக்கம் மைதானத்தில் அமைந்துள்ள பிட்ச்சானது சிவப்பு மண்ணை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கொல்கத்தா அணியின் சூழல் பந்து வீச்சாளர்களான சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரின் பந்து வீச்சு வித்தியாசமாக அமையும் இதனால் வெற்றி வாய்ப்பு கொல்கத்தா அணிக்கு அதிகம்”, என்று அவர் பேசிய போது கூறி இருந்தார். இவர் கூறுவது ஒரு வகையில் சரிதான் ஏனென்றால் கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்களான வருண் சக்கரவர்த்தி 20 விக்கெட்களும், சுனில் நரேன் 16 விக்கெட்டுகளும் எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்